OUR LADY OF GOOD HEALTH PARISH COMMUNITY.
MISSION STATEMENT

We are, a Roman Catholic Community dedicated to living our faith through Word and Sacrament. As a distinct ethnic community we strive to preserve our Tamil cultural traditions. Customs, Values and Language for generations through our faith life.

We are committed to spiritual and moral development of family and community life.
Encourage our youth to participate actively in our parish life.
We recognize that our seniors are vital to the life of our community and encourage their involvement in all areas.
  Foster a culture, which demonstrates that they are appreciated and valued.
We are committed to taking care of the vulnerable members of our community (the sick, poor, lonely & new immigrants.)
We share our Catholic Faith with the larger Catholic Community of Toronto;
We are a welcoming community that seeks to provide a place of comfort and a spirit of acceptance and love for all.


புனித ஆரோக்கிய அன்னை பங்கின் எதிர்நோக்கு

நாம் அனைவரும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையினர், இறை வார்த்தையிலும், அருள் அடையாளங்களிலும் நம்பிக்கைகொண்டு எம் வாழ்வை அர்ப்பணித்து எம் வாழ்வுமுறைகள், மதிப்பீடு, மொழி, ஆகியவற்றை உள்ளடக்கி, தலைமுறை தலைமுறையாக எம் விசுவாச வாழ்வினூடாக காத்து வாழ்ந்து வளரும் ஓர் தனி இனமாகும்.

நாம் அனைவரும் எமது ஆன்மீக அறநெறி நற்பண்புகளை கடைப்பிடித்து, எம் குடும்பங்களுக்கும், சமூதாய
      வாழ்விற்கும்  அர்ப்பணித்து வாழ்பவர்கள்.
இளைஞர்களை எமது பங்குசபை வாழ்வில், திறன்கொண்ட பணியில் முழுமையாக செயல்பட ஊக்குவிப்பவர்கள்.
எம் சமூதாயத்தில் வாழும் முதியோர்கள் மிக முக்கியமானவர்கள் என்பதை இனங்கண்டு, அவர்களை வேறுபட்ட
      நிலைகளில் பங்குகொள்ளச் செய்து, ஊக்குவித்து அவர்களது        கலாச்சாரம், பண்பாடுகள், நடைமுறைகள்
      ஆகியவற்றை ஏற்று மதித்து வாழ்பவர்கள்;.
எமது சமூகத்தில் வாழும் வலிமை குன்றியோர், நோயாளர், வறுமையில் வாடுவோர், தனிமைப்படுத்தப்பட்டோர்,
      புதிதான குடிவரவாளர்கள் ஆகியோரை இனங்கண்டு     
      உதவிக்கரம் கொடுப்பவர்கள்,
எமது கத்தோலிக்க விசுவாசத்தை ரொறன்டோ பெரும்பாகத்தில் வாழும் ஏனைய கத்தோலிக்க மக்களுடன்
      பகிர்ந்து கொள்பவர்கள்..
நாம் அனைவரும், அன்பு, அரவணைப்பு ஆதரவு தேடி அலைவோருக்கு நேசக்கரம் நீட்டி, இடமளித்து வரவேற்கும்
      ஓர் பங்கு சமூதாயமாகும்.