பாடல்கள்


மருதமடு அன்னையின் பாடல்

மருதமடுப் பதியில் கருணை மழை பொழியும்
திருமகள் வருவீரே எம் திருமகள் வருவீரே

மண்ணில் மனிதகுலம் உண்டு மனம்மகிழ
அண்ணல் யேசுவைத் தந்த அமல உற்பவ மாதே (மருத. . .)

நாட்டில் நலன்கள் குன்றி நாங்கள் வருந்தும் வேளை
காட்டில் இருந்து வந்து கண்ணீர் துடைப்பவளே (மருத. . .)

ஏங்கும் தமிழர் நிலம் காவல் புரியும் தாயே
தூங்கும் தமிழர் மனம் மாற்றம் கொடுப்பவளே (மருத. . .)

சிந்தும் குருதி நின்று தங்கும் தமிழ் மண் தந்து
வெந்து மடிந்த மக்கள் நெஞ்சம் நிறைத்தவளே (மருத. . .)

ரொறன்ரோ நகரில் தமிழ் பங்கின் நலன்கள் நல்கி
வேண்டும் வரங்கள் தந்து நெறிகளும் காப்பவளே (மருத. . .)



புத்தாண்டு  வழிபாட்டில் பாடப்பட்ட சில பாடல்கள்


நுழைகையில்

எங்களின் வாழ்வில்; சூரிய உதயம் இன்றே நிகழ்ந்தது
திங்களைப் போல யேசுவின் வரவால் உள்ளம் குளிர்ந்தது
எங்களைச் சிதைத்த அடிமை விலங்கு முறிந்தே விழுந்தது
எங்கும் விடுதலை கீதங்கள் முழங்க மானுடம் சிறந்தது

அன்பும் அமைதியும் அவனியை ஆளும் காலம் கனிந்தது
அறியாமை இருள் விலகும் என்னும் நம்பிக்கை பிறந்தது --2
அனைத்து மதங்களும் இணக்கமாய் நெருங்கி உறவாடும் நிலையோ
இணைந்து மகிழ்ந்திட மனிதம் உயரும் அருங்குறி தெரிகிறது

செல்வரும் ஏழையும் சேர்ந்தே வாழும் சமரசம் நிலவியே
எல்லா இனங்களும் ஒன்றென எண்ணும் நேரமும் வந்தது -- 2
பெண்மையை மதித்து பெருமையைச் சேர்க்கும் பெருங்குணம் ஓங்கியே 
நன்மைகள் பெருகி நானிலம் சிறக்கும் நாளும் மலர்ந்தது


தியானிக்கையில்

குழலோடும் யாழோடும் இனிதான தமிழோடும்
தேவாதி தேவனை புகழ்ந்தேற்றுவோம்
திரு ஏக தேவனுக்கு புகழாரங்கள்
புவி ஆளும் வேந்தனுக்கு புதுப்பாடல்கள்

ஆண்டவரே நல்ல மேய்ப்பனாம்
நாமெல்லாம் அவரது ஆடுகளாம் (2)
                      (குழலோடும்..

வாழ்வினை ஈய்ந்தவர் ஆண்டவராம்
நாமெல்லாம் அவரது குழந்தைகளாம் (2)
                       குழலோடும்..

படைத்தெம்மைக் காத்திடும் இறைவனாம்
நாமெல்லாம் அவரது கருவிகளாம் (2)
                        (குழலோடும்..


காணிக்கையில்

தந்திட வருகின்றேன் நிறைவாய்
என்னையே உமக்காக
இருப்பதை எல்லாம் கொடுக்கின்றேன்
கொடுத்தவர் நீயன்றோ இறைவா

எனக்கென்று கொடுத்ததெல்லாம்
எடுத்துக்கொள் முழவதும்; - 2
இளமையும் வளமையும் நான்
வழங்கிட வறியவர்க்கு - 2
வரம் தருவாய் இறைமகனே (தந்திட

என்னையும் உன்னைப்போல
உடைத்திட வருகின்றேன் - 2
உலகோர் வாழ்ந்திடவும்
உரிமைகள் அடைந்திடவும் - 2
வரம் தருவாய் இறைமகனே (தந்திட..

இறைநினைவில்

அப்பா பிதாவே  அப்பா பிதாவே  அப்பா பிதாவே  பிதாவே

உம்தூய நாமம் வாழ்கவே,      உம்தூய அரசு வருகவே
உம் அன்பு எம்மில் பெருகவே,   உம் பண்பு எம்மில் வளரவே

விண்ணக வாசிகள் வாழ்வதுபோல்  மண்ணக மாந்தரும் வாழந்;திடுக
உம் சித்தம் எம்மில் நிறைவேறுக  உம் திட்டம் எம்மில் பலன் தருக

அன்றாட உணவைத் தந்தருளும்   ஆவியை எம்மேல் பொழிந்தருளும்
உம் திருவாக்கை நல்லுணவாக    உண்டு மகிழவே செய்தருளும்

பிறர் குற்றம் நாங்கள் பொறுப்பதுபோல் எம் குற்றம் நீரே பொறுத்தருளும்
சோதனை நின்று நீர் காத்தருளும்  சோதிக்கும் சாத்தானை விரட்டிவிடும்


திருவிருந்து பகிர்கையில்

எனில் வாரும் என்யேசுவே
என்றும் என்னோடு உறவாடவே
நீர் இன்றி ஒன்றில்லையே
இங்கு நீர் தானே எம் எல்லையே

என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே
உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே
என் அன்புத் தாயாக என்னாளும் என்னைக் காக்கவே
என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
தேவா எழுந்துவா
தேடும் அமைதி தா - 2
உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன்
உறவை தேடியே  (எனில்.)

பயணம் தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
சுமை எல்லாம் சுகமாக பகை எல்லாம் பரிவாகவே
நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே
தேவா எழுந்து வா
தேடும் அமைதி தா - 2
உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன்
உறவைத் தேடியே (எனில்)

நன்றி நிறைகையில்

புத்தம் புதிய ஆண்டிலே புனிதன் யேசு வழியிலே
புரட்சிப் பயணம் தொடருவோம்
புதிய வாழ்க்கை வாழுவோம்
HAPPY HAPPY NEW YEAR (4)
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
புதிய ஆண்டின் வரவு கண்டு கொண்டாடுவோம் (2)

புலரும் இந்த ஆண்டு இணைந்து வாழும் ஆண்டு
இறையரசின் பெருமைகளை வாழ்ந்து காட்டும் ஆண்டு (2)
அடிமை நீக்கி அன்பு கொண்டு அமைதிப் பயணம் தொடருவோம் (2)
HAPPY HAPPY NEW YEAR (4)
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
புதிய ஆண்டின் வரவு கண்டு கொண்டாடுவோம் (புத்தம்.

மலரும் இந்த ஆண்டு நீதி கேட்கும் ஆண்டு
புது வாழ்வின் இலட்சியத்தை வென்று காட்டும் ஆண்டு (2
உறவு கொண்டு உதயம் காண உண்மை வாழ்வைத் தொடருவோம் (2)                      
HAPPY HAPPY NEW YEAR (4)
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
புதிய ஆண்டின் வரவு கண்டு கொண்டாடுவோம் (புத்தம். 

நத்தார் பாடல்கள்

ஆலயமணி ஓசையை நாம்

ஆலயமணி ஓசையை நாம் கேட்டிடுவோம் வாhPர்
ஆனந்தமே பாலன் புகழ் பாடிடுவோம் வாhPர்
ஆனந்தமே பாலன் புகழ் பாடிடுவோம் வாhPர்

யேசு வந்து பிறந்திருக்கும் இடத்தையறிந்தாயா
யேசு வந்து நடமாடும் நாளையறிந்தாயா 
யேசு வந்து பிறந்திருக்கும் இடத்தையறிந்தாயா
யேசு வந்து நடமாடும் நாளையறிந்தாயா 

அன்றாட வாழ்வினிலே ஆனந்தமே வாழ
அருகில் அமர்ந்திருக்கும் அயலவனில் யேசு
அருகில் அமர்ந்திருக்கும் அயலவனில் யேசு
  (ஆலயமணி)
வறுமையினால் வாடுவோரில் யேசுவைக் கண்டாயா
வருத்தத்தினால் வருந்துவோரில் யேசுவைக் கண்டாயா
வறுமையினால் வாடுவோரில் யேசுவைக் கண்டாயா
வருத்தத்தினால் வருந்துவோரில் யேசுவைக் கண்டாயா

அல்லல் படுவோரில் ஆபத்தில் இருப்போரில்
யேசு பிறந்திருக்கும் அழகை நீ கண்டாயா
யேசு பிறந்திருக்கும் அழகை நீ கண்டாயா
  (ஆலயமணி)

மாமலை அடியில் மாடடைக் குடிலில்
மாமரி மடியில் பிறந்தாய்
மாபரனே தவழ்ந்தாரே - நாம்
மகிழ்ந்திடுவோமே வாhPர்
ஆரிரரோ (2) ஆரிரரோ

கமலம் நீரில் மலர்வது போல்
அமலியின் மடியில் தவழ்பவனே
காலையில் தோன்றும் விண் மீன் போல்
உலகினில் உதித்த இறைமகனே

தூய நகராம்

தூய நகராம் பெத்லேமில் தேவ பாலகனும்
நேயமுடனே அவதரித்தார் நெஞ்சம் மகிழ்ந்திடவே

மாமலையோரம் மாடடைக் குடிலில் மாதவன் மனுவானார்
மாமரி மடியில் மன்னர் மன்னன் மாண்புடன் கண்ணயர்ந்தார்
மார்கழி மாதம் மயக்கும் குளிரில் மரியின் மனம் நெகிழ
பார் புகழ் வேந்தன் பனியில் நடுங்கி பாசத்திற்கேங்கி நின்றார்
(தூர நகராம்)

தேனினும் இனிய தித்திக்கும் மொழியில் தேவனின் தூதர்களும்
தேடியே வந்து வானகம் மகிழ பாலனைப் புகழ்ந்தனரே
ப10மியில் நல்மனம் உள்ளவர் யாவரும் சாந்தியுடன் வாழ
ஏழையின் பாவம் நீக்கிட வந்தார் என்றே பாடி நின்றார்
(தூய நகராம்)


தூய நகராம் பெத்லேமில் தேவ பாலகனும்
நேயமுடனே அவதரித்தார் நெஞ்சம் மகிழ்ந்திடவே

மாமலையோரம் மாடடைக் குடிலில் மாதவன் மனுவானார்
மாமரி மடியில் மன்னர் மன்னன் மாண்புடன் கண்ணயர்ந்தார்
மார்கழி மாதம் மயக்கும் குளிரில் மரியின் மனம் நெகிழ
பார் புகழ் வேந்தன் பனியில் நடுங்கி பாசத்திற்கேங்கி நின்றார்
    (தூய நகராம்)

தேனினும் இனிய தித்திக்கும் மொழியில் தேவனின் தூதர்களும்
தேடியே வந்து வானகம் மகிழ பாலனைப் புகழ்ந்தனரே
ப10மியில் நல்மனம் உள்ளவர் யாவரும் சாந்தியுடன் வாழ
ஏழையின் பாவம் நீக்கிட வந்தார் என்றே பாடி நின்றார்
    (தூய நகராம்)


திருப்பலிப் பாடல்கள்

நுழைகையில் . . .

அமைதியின் கருவியாய் ஆண்டவரே வருகின்றோம் (2)
நெஞ்சுக்குள்ளே நீர் அமைத்த அன்பு என்னும்
இல்லம் தன்னில் வளர்கின்றோம் - 2

நீயாக தந்த வாழ்க்கை இங்கு
நிலைமாறி போவதேனோ
மாறாத அருள் நேசம்
மன்றாடி கேட்கின்றேன்
ஊருக்கு ஊரிங்கு போர்க்களங்கள்
உள்ளுக்குள் உள்ளத்தில் போர்க்குணங்கள்
மாறும் காலம் காண வேண்டும்
மனித நேயம் வாழட்டும்

அமைதியின் . . .

பேதங்கள் ஏதும் இல்லை
என்னும் வேதங்கள் இன்று வேண்டும்
எல்லோரும் உன் பிள்ளைகள்
இது இல்லையென்றால் நீரும் இல்லை
வானுக்கு மேல் உந்தன் வீடு இல்லை
பூமிக்கு கீழும் ஏதும் இல்லை
மனித இதயம் மாறும் போது
புதிய அரசு பூமியில்

அமைதியின் . . .


தியானிக்கையில் . . .

என் யேசுவே என் யேசுவே
உம்மை நான் காண வேண்டும்
என் யேசுவே என் யேசுவே
உம் அருகில் வாழ வேண்டும்

என் தாகம் தீரும் அய்யா
என் ஏக்கம் போக்கும் அய்யா (2)

கிறீஸ்துவே எனக்கு ஜீவியம் ஆனார்
கிறீஸ்துவே எனக்கு வாழ்வும் ஆனார் (2)
எதற்கும் நான் அஞ்ச மாட்டேன்
எதற்கும் நான் கலங்க மாட்டேன் (2)

கிறீஸ்துவே எனக்கு உண்மையும் ஆனார்
கிறீஸ்துவே எனக்கு உயிரும் ஆனார் (2)
எதற்கும் நான் அஞ்ச மாட்டேன்
எதற்கும் நான் கலங்க மாட்டேன் (2)

கிறீஸ்துவே எனக்கு கேடயம் ஆனார்
கிறீஸ்துவே எனக்கு பெலமும் ஆனார் (2)
எதற்கும் நான் அஞ்ச மாட்டேன்
எதற்கும் நான் கலங்க மாட்டேன் (2)


காணிக்கையில் . . .

வாழ்வை பலியாய் மாற்ற வந்தேன்
என்னையே ஏற்றிடுவாய்
முழுமனதுடனே கையளிக்கின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய் - 2

கோதுமை மணியும் திராட்சைக்கனியும்
புது உருப் பெறுவது போல்
அன்பும் அமைதியும் நீதியுமே
மனிதனில் மலர்ந்திட உயிர்த்ததுவே (வாழ்வை…)

நான் வாழப் பிறரும் பிறர் வாழ நானும்
தேவை என்றுணர்ந்தேன்
சமத்துவ சோதர நோக்குடனே
புதுயுகம் காண்போம் அகத்தினிலே (வாழ்வை…)


நன்றி நவில்கையில்

நீயே துணை எந்தன் இறை யேசுநாதா
திருவடி சரணம் ஐயா தேவா
திருவடி சரணம் ஐயா
நலன் நல்கும் நாயகா புதிய நற் போதகா
அனைத்துக்கும் மன்னவா எனை என்றும் ஆள்பவா

கருவது முதலாய் புரிந்துதான் இருந்தாய்
உருவது கொடுத்தென்னை தெரிந்தெடுத்தாய்
அருகினில் அமர்ந்திட அரியணை அளித்தாய்
உருகிட மெழுகென உலகினில் பணித்தாய்

கனிதரும் மரமாய் மணம்தரும் மலராய்
பணிசெய்ய என்னையும் அழைத்திடுவாய்
உழைத்திடுவேன் உந்தன் அடியவன் எனவே
தழைத்திடுவேன் உன்னில் கொடியென இணைந்தே

எளியவர் உயர வறியவர் வாழ
பசித்தவர் யாவரும் நிறைவுபெற
ஒடுக்கப்பட்டோர்களின் விலங்குகள் உடைய
உரிமையின் வாழ்வதை உரியவர் அடைய


அன்னையைப் புகழ்கையில்

மருதமடு மாதாவே மனுக்குலத்தின் தாயாரே
கருணை அருட் செபமாலை கனிந்திட நாம் செய்தாயே

மகிமை நிறை மாமரியே மாதவருட் பூரணியே
மக்கள் பாவம் பொறுத்தருள மன்றாடாய் நின் சுதனை

துயரம் நிறை தாயகத்தை தூயவளே பார் நீயே
புயல் அரக்க போர் முடிந்து பூமி மீள அருள் நீயே

நீண்ட காலம் உறங்காமல் நிலம் அழுது கிடக்குதம்மா
மாண்டவர்கள் போதாதோ மாமரியே அருள் செய்வாய்



தீர்த்தம் தெளித்தல் (பொதுக்காலம்)

ஆண்டவரே ஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர்;
நானும் தூய்மை ஆவேன்.
நீரே என்னைக் கழுவ நானும்
உறைபனி தனிலும் வெண்மையாவேன்.

  இறைவா உமது இரக்கப் பெருக்கத்திருக்கேற்ப
  என்மேல் இரக்கம் கொள்ளுவீர்.

  பிதாவும் சுதனும் தூய ஆவியும்
  துதியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக.
  ஆதியில் இருந்தது போல்
  இன்றும் என்றும் நித்தியமாகவும் -  ஆமென்.


தீர்த்தம் தெளித்தல் (பாஸ்குகாலம்)

தேவாலய வலப்புறமிருந்து
தண்ணீர் புறப்படக் கண்டேன் - அல்லேலூயா.

அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ
அவர்கள் யாவருமே
ஈடேற்றம் பெற்றுக் கூறுவர்:
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.

ஆண்டவரைப் போற்றுங்கள்
ஏனெனில் அவர் நல்லவர்;
அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே;
பிதாவும் சுதனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய் பெறுக,

ஆதியில் இருந்ததுபோல்
இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்.


ஆண்டவரே இரக்கமாயிரும்

ஆண்டவரே இரக்கமாயிரும்!
கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
ஆண்டவரே இரக்கமாயிரும்!

உன்னதங்களிலே இறைவனுக்கு

உன்னதங்களிலே இறைவனுக்கு
மாட்சிமை உண்டாகுக!
உலகினிலே நல் மனத்தவர்க்கு
அமைதியும் உண்டாகுக!
புகழ்கின்றோம் யாம் உம்மையே
வாழ்த்துகின்றோம் இறைவனே!
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை
மகிமைப் படுத்துகின்றோம் யாம்.

உமது மேலாம் மாட்சிமைக்காக
உமக்கு நன்றி நவில்கின்றோம்.
ஆண்டவராம் எம் இறைவனே
இணையில்லாத விண்ணரசே!

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்
தேவ தந்தை இறைவனே!
ஏக மகனாக ஜெனித்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்து இறைவனே!

ஆண்டவராம் எம் இறைவனே!
இறைவனின் திருச் செம்மறியே!
தந்தையினின்று நித்தியமாக
ஜெனித்த இறைவன் மகனே நீர்!

உலகின் பாவம் போக்குபவரே,
நீர் எம்மீது இரங்குவீர்!
உலகின் பாவம் போக்குபவரே,
எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்!

தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே,
நீர் எம்மீது இரங்குவீர்!
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே
நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்!
நீர் ஒருவரே உன்னதர்!
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே.  - ஆமென்!

அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா!
மெல்லிசைக் கருவிகள் மீட்டிடுவோம்
மேளமும் தாளமும் முழங்கிடுவோம்
நல்லவர் ஆண்டவர் என்றுரைப்போம்
நாளுமே அவரைப் போற்றிடுவோம்.

வானமும் பூமியும்

வானமும் பூமியும் படைத்தவராம்
கடவுள் ஒருவர் இருக்கின்றார்;
தந்தை சுதன் தூய ஆவியுமாய்
நம்மில் உறவுடன் வாழ்கின்றார்!

பரிசுத்த ஆவியின் வல்லமையால்
திருமகன் மரியிடம் மனுவானார்;
மனிதரைப் புனிதராய் ஆக்கிடவே
புனிதராம் கடவுள் மனிதரானார்!

பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்,
கல்லறை ஒன்றில் அடக்கப்பட்டார்;
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்,
மரணத்தின் மீது வெற்றி கொண்டார்!

பரலோகம் வாழும் தந்தையிடம்
அரியணை கொண்டு இருக்கின்றார்;
உலகம் முடியும் காலத்திலே
நடுவராய்த் திரும்பவும் வந்திடுவார்!

பரிசுத்த ஆவியை நம்புகிறோம்,
பாரினில் அவர் துணை வேண்டுகிறாம்;
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று
பரிகார வாழ்வில் இணைந்திடுவோம்!

திருச்சபை உரைப்பதை நம்புகிறோம்;
புனிதர்கள் உறவை நம்புகிறோம்;
சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை
விசுவாசப் பொருளாய் நம்புகிறோம்!

தூய நல் ஆவியாம் இறைவனையும்
தூயவராக்கும் ஒப்புரவையும்
புனிதராம் இயேசுவின் ஆட்சியையும்
புனித நல் வாழ்விற்காய் ஏற்கின்றோம்.
  - ஆமென்!

தூயவர்

தூயவர், தூயவர், தூயவர்,
மூவுலகிறைவனாம் ஆண்டவர்!
வானமும் வையமும் யாவும் நும்
மாட்சிமையால் நிறைந்துள்ளன!
உன்னதங்களிலே ஓசான்னா! (2)

ஆண்டவர் திருப்பெயரால்
வருபவர் ஆசீர் பெற்றவரே!
உன்னதங்களிலே ஓசான்னா! (2)

விசுவாசத்தின் மறைபொருள்

குரு

இது விசுவாசத்தின் மறைபொருள்

இறை மக்கள்

எமக்காக மரித்தீர்
எமக்காக  உயிர்த்தீர்
மீண்டும் வருவீர்
உமக்கே ஆராதனை உமக்கே

ஆராதனை.

இறை மக்கள் (மறு வடிவம்)

கிறிஸ்து மரித்தார்
கிறிஸ்து உயிர்த்தார்
கிறிஸ்து மீண்டும் வருவார்.

அப்பா பிதாவே

அப்பா பிதாவே அப்பா பிதாவே
அப்பா பிதாவே பிதாவே.

உம் தூய நாமம் வாழ்கவே,
உம் தூய அரசு வருகவே;
உம் அன்பு எம்மில் பெருகவே,
உம் பண்பு எம்மில் வளரவே.

- அப்பா பிதாவே

விண்ணக வாசிகள் வாழ்வது போல்
மண்ணக மாந்தரும் வாழ்ந்திடுக;
உம் சித்தம் எம்மில் நிறைவேறுக;
உம் திட்டம் எம்மில் பலன் தருக.

- அப்பா பிதாவே

அன்றாட உணவைத் தந்தருளும்;
ஆவியை எம்மேல் பொழிந்தருளும்;
உம்திரு வாக்கை நல் உணவாக
உண்டு மகிழவே செய்தருளும்.

- அப்பா பிதாவே

பிறர் குற்றம் நாங்கள் பொறுப்பதுபோல்
எம் குற்றம் நீரே பொறுத்தருளும்;
சோதனை நின்று எம்மை காத்தருளும்;
சோதிக்கும் சாத்தானை விரட்டிவிடும்.

- அப்பா பிதாவே


உலகின் பாவம் போக்கும்

உலகின் பாவம் போக்கும்
இறைவனின் திருச்செம்மறியே,
எம்மேல் இரக்கம் வையும்.

உலகின் பாவம் போக்கும்
இறைவனின் திருச்செம்மறியே,
எம்மேல் இரக்கம் வையும்.

உலகின் பாவம் போக்கும்
இறைவனின் திருச்செம்மறியே,
எமக்கு அமைதி அருளும்.



More Songs.....
HOME

OUR LADY OF GOOD HEALTH
TAMIL PARISH