புனித சூசையப்பர் ஆலய பங்கு மக்களுக்கு நன்றி கூறும் முகமாக, ஞாயிற்றுக்கிழமை 27ம் திகதி காலை 10 மணிக்கு ஓர் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப் பட்டதுடன், ஆலய மண்டபத்தில் விருந்து உபசாரமும் இடம்பெற்றது. அதன்போது எடுக்கப்பட்ட படங்கள்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 4ம் திகதி மாலை 4:30 மணிக்கு, கிங்ஸ்ரன்-மிட்லான்ட் சந்திப்பில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலயத்தில் இடம்பெற்ற தமிழ்த் திருப்பலியின்போது எடுக்கப்பட்ட படங்கள்.
தமிழ் பங்குத்தந்தை அருட்திரு பீற்றர் ஜிட்டேந்திரனுடன், புனித திரேசாள் ஆலய பங்குத்தந்தை அருட்திரு எஸ்.இராஜரட்ணம், அருட்திரு மொன்பேட், அருட்திரு தவராஜசிங்கம் ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுத்து புதிய தமிழ் பங்கில் சிறப்பாக ஆரம்ப வழிபாடுகள் இடம்பெற்றன. 700 க்கும் அதிகமான மக்கள் திரண்டு வருகைதந்து ஆரம்ப நிகழ்வைச் சிறப்பித்தனர்.
2015, ஆகஸ்ட் 15ஆம் திகதி சனிக்கிழமை கனடா வாழ் தமிழ் கத்தோலிக்க சமூகத்தினால் மேரி லேக் திருத்தலத்தில் மருதமடு அன்னைக்கு பெருவிழா எடுக்கப்பட்டது. ஐயாயிரத்துக்கு அதிகமான மக்கள் அன்னையின் வி;ண்ணேற்பு விழாவில் மருதமடு அன்னைக்கு தமது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கவும் திருப்பலியில் பங்கு கொள்ளவும் ஒன்று கூடினர்
கடந்த 18 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் சனிக்கிழமைகளில் மருதமடு அன்னையின் பெருவிழா ரோரன்ரோவின் பெரும் பாகத்தில் வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்று காலையிலிருந்து மக்கள் இத்திருத்தலத்தில் ஒன்றுகூடத் தொடங்குவர். மதியம் 11.30 மணியளவில் ஆலயத்தினுலிருந்து பாடல்களுடனும் செபித்தவாறும் மருதமடு அன்னையின் திருவுருவம் ஆலய மைதானத்தில் அழகாக அமைக்கப்பட்ட திருப்பீடத்துக்கு அழைத்து வரப்பட்டு 12.00 மணிக்கு திருப்பலி ஆரம்பமானது. திருப்பலியை தொடர்ந்து மருதமடு அன்னையின் திருவுருவம் அனைத்து மக்களும் புடைசூழ திருஉலா வந்து அன்னையின் திரு உருவ ஆசிர் வழங்கப்பட்டது.
மேரி லேக் ஆலயமும் அதைச்சூழ இருக்கும் சுற்றாடலும் மருதமடு ஆலயத்தின் நினைவுகளையே கொண்டுவரும். திருப்பலியை தொடர்ந்து வந்திருந்த மக்களனைவரும் குடும்பங்களாக நண்பர்களாக இவ்வாலயத்தை சுற்றி இருக்கும் மரங்களின் கீழிருந்து தம் சகோதரத்துவத்தையும் நட்பையும் பிரதிபலிக்கும் வகையி;ல் உணவுகளை பரிமாறி மகிழ்ந்திருப்பார்கள். மீண்டும் பிற்பகல் 3.30 மணியளவில் ஆலய மைதானத்தில் திருநற்கருணை வழிபாடு இடம்பெற்று நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டு அன்றைய திருப்பயணம் இனிதுடன் முடிவடைந்தது.